Versuchen GOLD - Frei
குற்ற உலகில் நேர்மையான கதாநாயகன்?
Andhimazhai
|July 2022
இன்று படம் இயக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் உதவி இயக்குநர்கள் 'சார். ஒரு கிரைம் கதை. அதுல நீங்க Underworld DON சார்..." என கதை சொல்ல ஆரம்பித்தால் குறைந்தது பத்து நடிகர்களாவது கால்ஷீட் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். விக்ரமின் வெற்றி அப்படி ஒரு பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்தும் தியேட்டர்களில் அரங்குநிறைந்த காட்சிகளைப் பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு பேட்டரி வாங்கித் தந்தார் என்பதற்காக 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலை ஆகியிருக்கும் பேரறிவாளன் இருக்கும் இதே தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளையும் லட்சக் கணக்கான புல்லட்டுகளையும் சிதறவிட்டு ரத்தம் தெறிக்கத் தெறிக்க எடுத்த ஒரு படம் மாபெரும் வெற்றி அடைவது என்பது உண்மையிலேயே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னான உளவியல் காரணங்களை ஆராய்வதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் குற்ற உலகம் (CRIME WORLD) இதுவரை எப்படிப் புனையப்பட்டிருக்கிறது என்பது பற்றிய புரிதல் இங்கே தேவைப்படுகிறது. கதாநாயகன் எந்த உலகைச் சேர்ந்தவன் என்பதை பொருத்து சினிமாவிற்குள் இருக்கும் குற்ற உலகை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதல் வகையில் குற்ற உலகில் இருக்கும் அசைக்கமுடியாத வில்லன்களை துணிந்து எதிர்த்துப் போராடும் ஒருவனாக ஹீரோ கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். பல்வேறு இழப்புகளையும் இடர்பாடுகளையும் தாண்டி கெட்டவர்களை அழித்தொழிக்கும் இந்தவகையான கதாநாயக பிம்பமே எம்.ஜி.ஆர். காலம் தொட்டு கொண்டாடப்பட்டு வந்த பார்முலா. இவ்வகை படங்களில் பெரும்பாலும் ஹீரோ நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பார் அல்லது வில்லன்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார். அதன்பின்னான 80, 90 காலகட்டத்தில் இந்த நல்ல ஹீரோ கெட்ட வில்லன் என்ற கதைசொல்லல் முறை கொஞ்சம் கொஞ்சமாக மங்க ஆரம்பித்து இரண்டாம் வகை படங்கள் வெளிவர ஆரம்பிக்கின்றன.
Diese Geschichte stammt aus der July 2022-Ausgabe von Andhimazhai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Andhimazhai
Andhimazhai
குடும்பத்தின் கதை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.
1 min
March 26
Andhimazhai
குடும்ப அரசியலும் மத அரசியலும்
இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.
4 mins
March 26
Andhimazhai
அங்கே குற்றம்...இங்கே சகஜம்!
உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:
6 mins
March 26
Andhimazhai
கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்
‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.
4 mins
March 26
Andhimazhai
அவர் பாடும் பாடல்!
எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.
4 mins
March 26
Andhimazhai
நிலவின் கதைகள்
\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.
1 min
March 26
Andhimazhai
பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்
இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.
4 mins
March 26
Andhimazhai
குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...
அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.
2 mins
March 26
Andhimazhai
ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!
பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.
1 mins
March 26
Andhimazhai
வெற்று சாகசம்: முதல்வன்
ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.
2 mins
March 26
Translate
Change font size
