மாஸ்க் அவசியம் அணிய வேண்டுமா?

Thozhi|June 01, 2020

மாஸ்க் அவசியம் அணிய வேண்டுமா?
மாஸ்க் இல்லாமல் வெளியே வந்தால் ரூ.100 முதல் அதிகமாக கேரளாவில் ரூ.10000 வரை ஃபைன் என எங்கும் கொரோனா தொற்று மாஸ்க் எதிரொலிகள். ஒரு பக்கம் மாஸ்க் தேவையா என விவாதங்களும் சென்று கொண்டிருக்கிறது. சரி மாஸ்க் அவசியமா? அவசியம் எனில் எவ்விதமான மாஸ்க் அணியலாம், எத்தனை வகைகளில் மாஸ்க்குகள் உள்ளன, என்ன பயன்கள் என சொல்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, பொது மருத்துவ துறையின் உதவி பேராசிரியரான டாக்டர் சாய் லட்சுமிகாந்த் பாரதி.
ஷாலினி நியூட்டன்

“பொதுவாகவே கொரோனா மட்டுமல்ல, எந்தவித தொற்றுக்கும் முதல் கவசம், முகக் கவசம்தான். காற்று மாசு, கிருமி தொற்று, எல்லாவற்றிற்கும் வழி மூக்கு, வாய் மட்டுமே, இதற்கு ஒரு சின்ன தடை தான் மாஸ்க்குகள். எனினும் 100%மாஸ்க்குகளைக் கொண்டு நாம் கொரோனா வராமல் தடுக்கலாமா? என்று கேட்டால் அதற்கான ஆய்வு முடிவுகள் இல்லை. ஆனால் போதுமான அளவிற்கு சமூகப் பரவலைத்தடுக்கலாம். இதனால்தான் மாஸ்க் அவ்வளவு முக்கியம் என அரசாங்கம் முதல் மருத்துவத்துறை வரை கட்டாயப்படுத்துகிறோம் என்னும் டாக்டர் சாய் லட்சுமிகாந்த் மாஸ்க் வகைகள் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் விளக்குகிறார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

June 01, 2020