வாழ்க்கை ஒரு வரம்!

Penmani|May 2020

வாழ்க்கை ஒரு வரம்!
இந்த ந்த வாழ்க்கை பெரிய வரம். இரண்டு கை, இரண்டு கால், கண், காது, மூக்கு உடம்பு முழுசா இருக்கிறது பெரிய சந்தோஷத்தையும், முழு நிறைவையும், பல வளங்களையும் தரக்கூடியது. உண் மையில் நலமாக வாழ்வதை விட ஒரு பெரிய வளமில்லை.
வித்யாசாகர், குவைத்.

உடலில் ஊனமுற்றோர் கூட மனதால் முடங்கிவிடாமல் வென்று நிமிர்ந்து மகிழ்ந்து நிற்கும் வாழ்க்கையை வாழ்வது, நடப்பது, பார்ப்பது, சத்தங்களை கேட்க முடிவது அனைத்தையும் உணரமுடிவது எத்தனைப் பெரிய வரமில்லையா?

ஆனால் இந்த வரமான வாழ்க்கைக்குள்ளே நாம் எண்ணற்ற ஆசைகள், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், கவலை என்று பலவற்றை உள்ளே திணித்து நம் உடல் நலன் குறித்த, வாழ்க்கை குறித்த நிறைவின் மகிழ்ச்சிகள் பலவற்றை வீணே இழந்து விடுகிறோம்.

முதலில் நாம் இந்த எதிர்மறை எண்ணங்களை எல்லாவற்றையும் தூக்கி மொத்தமாக ஒரு மூட்டைப்போல கட்டி கவலைகள், வருத்தம், சோகம் என அத்தனையும் சேர்த்து வெளியே எறிந்துவிடுவோம்.

இந்த உடம்பு இருப்பதே பெரிய பாக்கியம். இந்த உடம்புக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். பிறரை நன்றியோடு பாருங்கள். பாராட்டுங்கள். அன்பு செய்யுங்கள். அன்பை பெருக்க முடிவதால்தான் மனிதன் தெய்வ நிலையையும் அடைய முடியும். அதனால் தான் மனிதரை விட மிக்க தெய்வமும் இல்லை என்றனர்.

உண்மையில் அன்பென்பது ஒரு வாழ்க்கைக்காக கிடைத்த பொதி. நிறைவான பொக்கிஷம் மனதிலிருந்து குறையவே குறைந்திடாத மாயமற்ற அறிவின் வழி. உணரத்தக்க உணர்வால் அறிய இயன்ற மனிதர்களை இணைக்கும். மனதால் உயிர்ப்புடன் நம்மைச் சேர்த்து வைத்து சந்தோஷத்தை நல்கும் அதீத சக்தி அன்பு.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 2020