பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது எப்படி?

Penmani|May 2020

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது எப்படி?
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் முதல் உணவு தாய்ப்பாலாக இருக்க வேண்டும்.

குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே அதற்கு தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கிவிடலாம். மற்ற எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு, தாய்ப்பாலில் தான் அதிகச் சத்துக்கள், என்சைம்ஸ், ஹார்மோன்ஸ், வளர்ச்சி காரணிகள், விட்டமின் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தி எல்லாம் அடங்கியுள்ளது.

குழந்தைக்கு பாலை உறிஞ்சத் தெரியவில்லை என்பது சிலரின் குறையாக இருக்கும். பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பிலேயே வாயால் உறிஞ்சும் குணம் இருக்கும். சில குழந்தைகள் விதிவிலக்காக ஆரம்பத்தில் தடுமாறலாம். ஆனால், பழக்கத்தில் எல்லா குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வந்துவிடும். உறிஞ்சத் தெரியவில்லை என்று தொடர்ந்து வேறு வழிகளில் பால் புகட்டக் கூடாது. தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் குழந்தைகள் பாலை உறிஞ்சிக் குடித்தல் அவசியமான ஒன்று. எனவே, பால் புகட்டலை பழக்கத் தில் உண்டு செய்ய வேண்டும்.

நிறைய பேரின் மற்றொரு கவலை, பால் பற்றவில்லை என்பது. தாய்ப்பால் சுரக்க என்னவழி என்ற கேள்வியை அனைவரிடமும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். குழந்தை உணவே பெற்றவர்கள் அனைவரும் தங்களது விஷயத் தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாங்கள் சாப்பிடும் பாலாக குழந்தைக்கு செல்கின்றது என்பதையும், அது நல்ல உணவாக இருக்கவேண்டும் என்பதிலும் நிறைய அக்கறை காட்ட வேண்டும்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 2020