சக்தி வாய்ந்த பிஸினஸ் பெண்!
MANGAYAR MALAR|August 01, 2020
சக்தி வாய்ந்த பிஸினஸ் பெண்!
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டிருக்கிறார் 38 வயதான ரோஷ்னி நாடார். இவரது தந்தையும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவருமான ஷிவ் நாடாரிட மிருந்த தலைமைப் பதவி, இப்போது ரோஷ்னியை வந்து சேர்ந்திருக்கிறது. இதையடுத்து, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஐ.டி. கம்பெனியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறார் ரோஷ்னி.
வர்ஷா

2013-ம் ஆண்டிலிருந்து ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம் பெற்றிருந்த ரோஷ்னி, அதன் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். அத்துடன், ஹெச்.சி.எல் கார்ப்பரேஷன் நிறுவனத் தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் (சி.இ.ஓ) தொடர்கிறார்.

புதுதில்லியில் உள்ள வசந்த வேலி பள்ளியில் படித்த ரோஷ்னி, அமெரிக்காவில் ரேடியோ, டி.வி., திரைப்படம் போன்ற மீடியா தொடர்பான தகவல் தொடர்பியலில் இளநிலைப் பட்டமும், எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றவர். யோகாவிலும், பயணத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 01, 2020