திருக்காலடியப்பன் பாதம் பணிவோம்

MANGAYAR MALAR|May 01, 2020

திருக்காலடியப்பன் பாதம் பணிவோம்
காலடியில், சிவகுரு ஆர்யாம்பிகை தம்பதியருக்கு சிவனின் அம்சமாக அவதாரம் செய்தவர், உலகில் அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டியவர் ஸ்ரீ ஆதிசங்கரர் என்பது எல்லோருக்கும் தெரியும். இவர் வாழ்ந்த காலம் முப்பத்து இரண்டு வருடங்கள்தான்.
மாலதி சந்திரசேகரன்

ஐந்து வயதிலேயே ஸ்ரீ சங்கரருக்கு உபநயனம் செய்யப்பட்டது. ஆனால் அதைக் காணும் பாக்கியம் அவரின் தந்தைக்கு இல்லை. தந்தையை இழந்த சங்கரர் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். ஏழாவது பிராயத்திலேயே, வேதங்கள், ஸ்மிருதி, புராணங்கள், வேத ஆகமங்கள், காவியங்கள் என்று பலவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.

குருகுல நியமங்களில் இருந்து சிறிதும் வழுவாமல் இருந்ததால், தினமும் பிக்ஷை எடுத்து, குரு பத்னியிடம் கொடுத்து, அவர் தரும் பிரசாதத் தையே உட்கொண்டு வந்தார்.

அக்ஷய திருதியை தினமான அன்றும் எப்பொழுதும் போல் பிக்ஷைக்குக் கிளம்பியவர், அயாசகன் என்னும் ஏழை அந்தணர் வீட்டு வாயிலில் நின்று கொண்டு, 'பவதி பிக்ஷம் தேஹி, என்று குரல் கொடுத்துவிட்டு பிக்ஷைக்காகக் காத்திருந்தார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 01, 2020