சானல் தொடங்கலாம், வாங்க!

MANGAYAR MALAR|May 01, 2020

சானல் தொடங்கலாம், வாங்க!
நாமே தொலைக்காட்சிச் சானல் தொடங்குவதா? இதென்ன விளையாட்டு? நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்வதற்கான கேமராக்களில் தொடங்கி ஒளிபரப்பும் தொழில்நுட்பம் வரை கோடிக்கணக்கில் செலவாகுமே! அவ்வளவு செலவு செய்து நாம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும், அதைப் பற்றி யாருக்குத் தெரியப்போகிறது? அவ்வளவாகப் புகழ்பெறாத நம்முடைய நிகழ்ச்சிகளை யார் பார்க்கப் போகிறார்கள்?
என்.சொக்கன்

ந்தக் குறுகிய சிந்தனையை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. சானலொன்றைத் தொடங்கி நடத்துவதற்கு விலையுயர்ந்த கருவிகளோ ஒளிபரப்புத் தொழில்நுட்பமோ தேவையில்லை, அதற்கு நாம் புகழ்பெற்ற ஆளுமைகளாகவோ நட்சத்திரங்களாகவோ இருக்க வேண்டிய தேவையும் இல்லை. அதற்கான வழிகளை யூட்யூப் போன்ற தளங்கள் உருவாக்கித் தருகின்றன. மக்களும் இவ் வகையான நிகழ்ச்சிகளை விரும்பிக் காணத் தொடங்கிவிட்டார்கள்.

எடுத்துக்காட்டாக, சமீபத்தில் வெளியான புதுப்படமொன்றின் பெயரைக் கூகுளில் தட்டித் தேடுங்கள், வரும் விடைகளில் 'Videos' என்ற இணைப்பை க்ளிக் செய்யுங்கள், ஏராளமான பொதுமக்கள் அந்தத் திரைப்படத்துக்கு வீடியோ விமர்சனங்களை வெளியிட்டிருப்பதைக் காணலாம், அந்த வீடியோக்கள் ஒவ்வொன்றையும் ஆயிரக்கணக்கானோர், லட்சக்கணக்கானோர் பார்த்திருப்பதையும் கவனிக்கலாம்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 01, 2020