நிதி நெருக்கடியில் வீட்டின் நிலை!

Grihshobha - Tamil|May 2020

நிதி நெருக்கடியில் வீட்டின் நிலை!
“அரசாங்கத்தின் தவறான சில கொள்கைகள் காரணமாக பொருளாதார நெருக்கடியில் ஒரு சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி கொள்வதை தவிர வேறு வழியில்லை.''
பா. பரத்

அனிருத் 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டான். 30 வயதாகிறது, வீட்டை விட்டு தூரத்தில் டெல்லியில் ஒரு வாடகை வீட்டில் வாழ்கிறான். நல்ல சம்பளம். மனைவி அமர்தாவுக்கு 30 வயதாகிறது. அவளும் வேலைக்கு செல்கிறாள். வீட்டில் அனைத்து வசதிகளும் உள்ளது, இரண்டு செல்லப் பிராணிகளும் கூட. இருவருக்கும் தனித்தனியே கார்கள். இருவரும் நன்றாக வெளியே சுற்றுவது, வெளியே உண்பது வழக்கம். வீட்டு வேலைகளுக்கும் வேலையாட்கள் உண்டு, எதுவும் இருவரும் செய்ய வேண்டியதில்லை. இருவரும் காருக்கு இஎம்ஐ கட்டி வருகிறார்கள்.

ஹோட்டல்களில், மால்களில் சாப்பிடுவது, சினிமாவுக்கு போவது, மூன்று மாதத்திற்கு ஒருமுறை பிக்னிக் செல்வது, பிராண்டட் உடைகள், காலணிகள் அணிவது, சேமிப்பை பூஜ்ஜியம் ஆக்கி முடிந்த வரை செலவு செய்வது. இன்றைய இளம் தலைமுறையின் நிலை இதுதான். தங்கள் ஸ்டேட்டஸுக்காக பணத்தை செலவிட யாரும் பயப்படுவதில்லை. வாங்கிய சம்பளம் சில நாட்களில் தீர்ந்து போகிறது. தனிப்பட்ட செலவுகள், கார் கடன் தவணைகள், வீட்டு வேலையாட்கள் சம்பளம், கிரெடிட் கார்டு பில்கள் போன்றவை அடுத்த மாத சம்பளத்திற்கு முன் கிரெடிட் கார்டு மூலமே ஓடிக் கொண்டிருக்கிறது.

தனது அலுவலகத்தில் அனிரூத் பாஸின் அறைக்கு சென்றான். நிறுவனத்தின் நிதி நிலைமை அதாள பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாக கூறினார். கடந்த இரண்டு மாதங்களாக வரவேண்டிய தொகை மிக குறைவாகவே வருகிறது. அரசு துறைக்கு சென்ற பணமும் இன்னமும் திரும்பவில்லை. சில தனியார் நிறுவனங்களிடமிருந்து வர வேண்டிய தொகையும் நிலுவையில் உள்ளது. வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணையும் கண்டிப்பாக செலுத்தியாக வேண்டும். அப்போது தான் இன்னும் கடன் பெற முடியும்.

அதை நிறுத்தி வைக்க முடியாது. எனவே இந்த மாத சம்பள பணத்தை சற்று தாமதமாக வழங்க வேண்டியிருக்கும் என்றார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 2020