தெய்வத்தின் குரல் : அம்பாளின் ஸ்வரூபம்
Kamakoti|September 2020
தெய்வத்தின் குரல் : அம்பாளின் ஸ்வரூபம்
ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகள் அருள்வாக்கு

'நீதான் பரமேஸ்வரன் சரீரம்" என்று ஸ்ரீசங்கர பகவத்பாதர்கள் அம்பிகையைப் பார்த்துச் சொல்கிறார். சரீரத்துக்குள் உயிர் இருக்கிறது. பல சரீரங்களுக்குள் பல உயிர்கள் இருக்கின்றன. இத்தனை உயிர்களுக்கெல்லாமும் உயிராக ஒரே மூல வஸ்துதான் இருக்கிறது. அந்த மூல வஸ்துவான பிரம்மம்தான் பரமேஸ்வரன் என்றால், அதன் இத்தனை தோற்றங்களுமே பராசக்தி. இது அவ்வளவும் அதற்குச் சரீரமாகவும், அது இவற்றுக்குப் பிராணனாகவும் இருக்கிறது. பிரபஞ்சம் அதில் உள்ள ஜீவராசிகள் அவற்றின் மனசு, புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாம் பரமேஸ்வரன் என்ற உயிருக்குச் சரீரம் மாதிரி. இது அத்தனையும் ஸாக்ஷாத் அம்பாள் தான். உடலும் உயிரும் மாதிரி பிரம்மமும் பிரம்ம சக்தியும் பிரியாமல் இருக்கின்றன. உடலில் எல்லா இடங்களிலும் உயிர் ஓடுகிற மாதிரி பராசக்திக்குள் முழுக்க பிரம்ம தத்துவமேதான் நிறைந்திருக்கிறது. அந்த பிரம்மத்துக்கே ஓர் உடம்பு கொடுத்துப் பரமேஸ்வரன் என்று வைத்தால், அந்த உடம்புக்குச் சாத்திய கவசமாக இருக்கிறவள் அம்பாள். கர்ணகவசம் மாதிரி பிரிக்கவே முடியாத கவசம்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 2020