வானமே கூரையாக விளங்கும் வெக்காளியம்மன்!
DEEPAM|November 05, 2020
வானமே கூரையாக விளங்கும் வெக்காளியம்மன்!
மலைக்கோட்டை நகரமாம் திருச்சி மாநகரத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பழைமையும் பெருமையும் வாய்ந்த அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் மிகவும் பிரபலமான, சக்தி வாய்ந்த ஆலயமாகும். 'சோழன் நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி உறையூரில், நங்கைக்கு பத்தினிக் கோட்டம் சமைத்து நாள்தோறும் விழாவெடுத்து, அலங்காரம் நிகழ்த்தி வந்தான்' என்று சிலப்பதிகார காவியத்தின் வரலாற்றுச் செய்தி மூலம் தெரிய வருகிறது. இந்தப் பத்தினி கோட்டத்தில் எழுந்தருளச் செய்த கண்ணகி வழிபாடுதான், காலப்போக்கில் வெக்காளியாக பெயர் மருவி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கௌசல்யா

காவிரிக்கரையின் தென் பகுதியில் மிகப் பழைமை வாய்ந்த, சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூர், சங்க இலக்கியத்திலும் சரித்திரங்களிலும் பேசப்படும் ஒரு முக்கியமான நகரமாகும். இங்கு பல தொன்மையான சரித்திரப் புகழ் பெற்ற கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமான கோயில் அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில்.

இந்தக் கோயிலில் உறையும் அன்னை ஒரு ஊர்க்காவல் தெய்வமாகையினால், உறையூரின் எல்லைப்பகுதியில் எழுந்தருளியுள்ளாள். எல்லைத் தெய்வங்களை வெட்ட வெளியில் அமைப்பது தமிழர்களின் மரபு என்பதால், வெக்காளியம்மனுக்கும் கூரை ஏதுமின்றி வடக்கு நோக்கி கோயில் அமைத்துள்ளார்கள். ஆனால், வெக்காளியம்மன் கூரையின்றி வெட்டவெளியில் இங்கு அருள்பாலிப் பதற்கு ஒரு சிறப்புக் காரணமும் கூறப்படுகிறது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

November 05, 2020