ஆயுளை விருத்தி செய்யும் சிரஞ்சீவி ஆலயம்!
DEEPAM|November 05, 2020
ஆயுளை விருத்தி செய்யும் சிரஞ்சீவி ஆலயம்!
நாகை மாவட்டம், திருக்கடையூருக்கு அருகில் திருமணல்மேட்டில் அமைந்துள்ளது மார்கண்டேயன் திருக்கோயில். சிவபெருமானால் சிரஞ்சீவியாக வாழ, வரம் பெற்ற மார்கண்டேய மகரிஷி அருளும் இந்தத் திருக்கோயிலின் வரலாறு மிகவும் சுவாரசியமானது.
தங்கம் மணிவண்ணன்

காசி திருத்தலத்தில் வசித்து வந்த மிருகண்டு முனிவர்மருத்துவதி தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் கவலையுற்ற தம்பதியர் காசியிலிருந்து புறப்பட்டு, சிவத் தலங்கள் அனைத்தையும் தரிசித்துக் கொண்டே வந்து, திருமணல்மேடு தலம் வந்தடைந்தனர்.

இங்கு ஒரு தவச்சாலை அமைத்து, சிவபெருமானையும் பார்வதி தேவியையும் ஆராதித்து கடுமையான தவம் இருந்தார் மகரிஷி. முனிவரின் தவத்தில் மனமிரங்கிய சிவபெருமான் முனிவரின் முன் தோன்றி, "என்ன வரம் வேண்டும்?'' எனக் கேட்டார்.

குழந்தை இல்லாத தனது மனத்துயரை இறைவனிடம் கூறிய முனிவர், தனக்குக் குழந்தை வரம் வேண்டும் என வேண்டி நின்றார்.

அதற்கு இறைவன், ''நீண்ட ஆயுளும் குறைந்த ஞானமும் உடைய குழந்தை வேண்டுமா? அல்லது நிறைந்த ஞானமும் பதினாறு வயது வரை மட்டுமே வாழும் குழந்தை வேண்டுமா?” எனக் கேட்டார்.

"ஞானமுள்ள குழந்தையே வேண்டும்'' என முனிவர் கேட்க, இறைவனும் அப்படியே ஆகட்டும்" என வரம் தந்தருளினார். வரம் பெற்ற முனிவர் மனம் மகிழ்ந்து மனைவியோடு காசிக்கு புறப்பட்டார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

November 05, 2020