நவராத்திரியில் அகண்ட தீப வழிபாடு!
DEEPAM|November 05, 2020
நவராத்திரியில் அகண்ட தீப வழிபாடு!
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி, இரண்டு மாத காலத்துக்கு, ‘ஸரத் காலம்' என்று பெயர். இந்தக் காலம் தொடங்கும் நாளன்று ஆரம்பித்து, ஒன்பது நாட்கள் அம்மனை வழிபடும் விசேஷத்தை, 'ஸரத் நவராத்திரி' என்பர்.
எம்.கோதண்டபாணி

நவராத்திரி நாட்களில் தினசரி வீட்டில் அம்மன் படம் அல்லது விக்ரஹத்தை வைத்து, தேவீ மாஹாத்மியம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி போன்றவற்றை பாராயணம் செய்து, நவாவரண பூஜை, சுவாஸினி கன்யா பூஜை செய்து வழிபட்டால் விசேஷ பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

தவிர்க்க முடியாத காரணத்தால் மிகவும் விசேஷமாக நவராத்திரி வழிபாட்டைக் கொண்டாட இயலாதவர்கள், எளிதாக வீட்டு பூஜை அறையில் ஒன்பது நாட்களும் தொடர்ந்து எரியும்படியான அகண்ட தீபம் ஏற்றி வைத்தும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

அம்பாளை பூஜை செய்யும் கலசம், விக்ரஹம், படம் அல்லது யந்திரம் ஆகியவற்றின் அருகில் ஒரு மரப்பலகையால் ஆன இருக்கை போட்டு அதில் மூன்று கோணமாக சந்தனத்தால் கோடு வரைந்து அதன் மீது மண் அகல் அல்லது வெள்ளி, பித்தளையால் ஆன விளக்கை வைக்க வேண்டும். அதில் பசு நெய் விட்டு வெண்மையான பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி அம்பாளுக்கு வலது புறம் வைக்க வேண்டும்.

இதைப் போலவே மேற்கூறிய படி யே செய்து மற்றொரு விளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு நிற பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்றி அம்பாளுக்கு இடது புறம் வைக்க வேண்டும். பிறகு,

'அகண்ட தீபகம் தேவ்யா ப்ரீதயே நவராத்ரகம்

உஜ்வாலயே த்வஹோராத்ரம் ஏகசித்தோத்ருட வ்ரத'

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

November 05, 2020