நான்முகன் தொடங்கிய நாரணன் உத்ஸவம்!
DEEPAM|October 05, 2020
நான்முகன் தொடங்கிய நாரணன் உத்ஸவம்!
ஏழுமலைகளின் மீது நின்று அருளாட்சி புரியும் கலியுக வரதனாய், கற்பக விருட்சமாய் விளங்கும் திருமலை திருப்பதி திருவேங்கடமுடையான் பக்தர்களின் வாழ்வில் பல்வேறு திருப்பங்களைத் தந்து அருள்புரிபவன். பூலோக வைகுண்டமாகக் கருதப்படும் திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோத்ஸவ விழா வெகு பிரசித்தமானது. அதேபோல், திருமலை மீது திருவேங்கடவன் வந்தமர்ந்த வரலாறும் வெகு சுவாரஸ்மானது.
எம்.கோதண்டபாணி

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை முடித்துக்கொண்டு, மஹாவிஷ்ணு வைகுண்டத்தில் வீற்றிருந்தார். அப்போது, பூலோகத்தில் கலியுகம் தொடங்கி, அதர்மம் பெருகியிருந்த சமயம். பூமியில் அதர்மத்தின் தொல்லை பொறுக்க முடியாத முனிவர்கள், பகவானின் அடுத்த அவதாரத்தை வேண்டி, காஷ்ய பரின் தலைமையில் யாகம் ஒன்றைத் தொடங்கினர். யாகத்தைக் காண வந்த நாரத முனிவர், 'யாகப் பலனை யாருக்குக் கொடுக்கப்போகிறீர்கள்?'' என முனிவர்களிடம் கேட்டார். அதற்கு முனிவர்கள், "முப்பெரும் தெய்வங்களில் யார் மிகவும் சாந்த மூர்த்தியோ அவருக்கே யாகப் பலனைக் கொடுக்கப் போகிறோம்'' என்று கூறினர். அதோடு, மும்மூர்த்திகளில் யாகப்பலனை பெறத் தகுதியானவரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை பிருகு முனிவரிடம் ஒப்படைத்தனர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 05, 2020