சென்னை மண்டல இளைஞரணி காணொலி கலந்துரையாடல் கூட்டம்! விடுதலைக்கு வாசகர் சங்கிலி மூலம் வாகை சூடி வரிந்து கட்டுவோம்

Viduthalai|May 29, 2020

சென்னை மண்டல இளைஞரணி காணொலி கலந்துரையாடல் கூட்டம்! விடுதலைக்கு வாசகர் சங்கிலி மூலம் வாகை சூடி வரிந்து கட்டுவோம்
பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் உரை!

சென்னை, மே 29

சூழ்நிலைகளையும் நமக்கு சாதகமாக்கிக் கொள்ளவேண்டும் என்று தத்துவப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் பொன்மொழிக்கேற்ப உலகம் முழுவதும் கரோனா பிடியில் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களின் முன்னெடுப்பின் நீட்சியாக சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் காணொலி வாயிலாக 20.05.2020 புதன்கிழமை மாலை 7 மணிக்கு துவங்கி 8.45 வரை சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் இர.சிவசாமி அவர்கள் தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட வட சென்னை, தென் சென்னை, ஆவடி, கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் மாவட்டச் சேர்ந்த இளைஞரணிப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தங்களது கரோனா ஊரடங்கு காலத்தில் மேற்கொண்டுள்ள பணிகளையும், அனுபவங்களையும், மனித நேய அடிப்படையில் செய்த வாழ்வாதார உதவிகளையும் பகிர்ந்து கொண்டனர். தோழர்களின் கருத்துரைகளுக்குப் பிறகு மண்டலச் செயலாளர் இர.சிவசாமியின் தலைமை உரையில், வணிக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினை விளக்கினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தனது உரையில்:

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 29, 2020

MORE STORIES FROM VIDUTHALAIView All