ஆடை உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டில் விற்பனை செய்ய அனுமதி
Tamil Mirror|September 24, 2020
ஆடை உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டில் விற்பனை செய்ய அனுமதி
முதலீட்டு சபை அனுமதியை பெற்று இயங்கும் ஆடைத் தொழில் துறையின் உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டு விற்பனையில் ஈடுபட அல்லது விற்பனையாளர்கள் அல்லது விநியோகத்தர்களிடமிருந்து உப ஒப்ப ந்தங்களைப் பெற்றுக் கொள்வதற்கு நிதி அமைச்சு அனுமதியளித்துள்ளது. செப்டெம்பர் 10ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வரும் வகையில் மூன்று மாத காலப்பகுதிக்கு, இந்த நடவடிக்கையில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுடன் எழுந்துள்ள நெருக்கடி நிலையைக் கவனத்தில் கொண்டு Joint Apparel Association Forum (JAAF) இனால் மேற்கொள்ளப்பட்டிருந்த கோரிக்கையின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதலீட்டு சபையின் அனுமதியைப் பெற்ற, ஆடை உற்பத்தியாளர்கள் தற்போது, உள்நாட்டு விற்பனையாளர்களிடமிருந்து உப ஒப்பந்தங்களைப் பெற்று, அவர்களினால் வழங்கப்படும் வரி செலுத்தப்பட்ட மூலப்பொருள்களைப் பயன்படுத்தி ஆடை உற்பத்திகளை மேற்கொண்டு வழங்க முடியும்.

முதலீட்டு சபை உடன்படிக்கைகள் மற்றும் உள்நாட்டு இறைவரி சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கைகளினூடாக திரட்டப்படும் வருமானத்துக்கு, உரிய வரிகள் செலுத்தப்படல் வேண்டும்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 24, 2020

MORE STORIES FROM TAMIL MIRRORView All