கொரோனா தடுப்பு நடவடிக்கை :காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாளை வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது!
கொரோனா தடுப்பு நடவடிக்கை :காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாளை வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது!
இந்தியாவே ஸ்தம்பிக்கிறது!!

சென்னை , மார்ச். 21- கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளன. நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு அரசின் அறிவிப்பை தொடர்ந்து நாளை வீட்டை விட்டு வெளியே யாரும் வரக்கூடாது. இதனால் நாடே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தொடர் பாகபிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். அப்போது முடிந்த வரை அனைவரும் வீட்டில் இருந்தபடியே அனைத்து வேலைகளையும் செய்ய முயற்சி செய்யுங்கள். மிக அவசியம் என கருதினால் மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லலாம்.

ஞாயிற்றுக்கிழமை அன்று மக்களால், மக்களுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது போல் கருதிக்கொள்ளுங்கள். அன்று யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருங்கள். இந்த வைரஸி லிருந்து நாட்டை பாதுகாப்பதற்கான முயற்சியின் சோதனையாக, இது அமையும் என்று அறிவு றுத்தியிருந்தார்.

ஊரடங்கு கடைபிடிப்பு

அதே போல் அரசியல்' தலைவர்கள், வணிகர்கள், தொழில் துறையினர், திரைப்படத் துறையினர் அனைவரும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். பிரதமரின் அழைப்பை ஏற்று தமிழக மக்கள் அனைவரும் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் மக்கள் ஊரடங்கு அறிவிப்பின்படி, தமிழகத்தில் நாளை அரசு பேருந்துகள், மெட்ரோ ரெயில்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 22-ந் தேதி காலை (நாளை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தாமாகவே முன் வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். அதன்படி, நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயங்காது.

மெட்ரோ ரெயில்களும் ஓடாது. தனியார் பேருந்துகள், சிற்றுந்துகளின் உரிமையாளர்களும் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

எல்லைகள் மூடல்

இதற்கிடையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் எல்லைகளை இணைக்கும் சாலைகள் இன்று மூடப்பட்டன.

இந்த நடவடிக்கை மார்ச் 31-ந் தேதி வரை தொடரும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 21, 2020

MORE STORIES FROM MALAI MURASU CHENNAIView All