ரத்த பரிமாற்று சிகிச்சையால் 6695 நபர்கள் பயனடைந்தனர்: மருத்துவ கல்லூரி முதல்வர் தகவல்
Maalai Express|june 17, 2020
ரத்த பரிமாற்று சிகிச்சையால் 6695 நபர்கள் பயனடைந்தனர்: மருத்துவ கல்லூரி முதல்வர் தகவல்
உலகெங்கிலும் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்தக் கொடையாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒரு ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். விழாவிற்கு தலைமை வகித்து பேசிய மருத்துவக்கள்ளூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். மீனாட்சி சுந்தரம் ,” கடந்த ஓராண்டில் 48 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு 1897 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

புதுக்கோட்டை, ஜூன் 17

இரத்த வங்கியில் 1707 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. மொத்தமாக சேகரிக்கப்பட்ட இந்த 3604 யூனிட் ரத்தத்தினால் 6695 நபர்கள் பயனடைந்துள்ளனர். எவ்வாறு எனில் ரத்தத்தை பகுப்பாய்வு செய்து அதன் அலகுகளான சிவப்பணுக்கள், தட்டை அணுக்கள், பிளாஸ்மா போன்றவை பல்வேறு நபர்களுக்கு செலுத்தப்பட்டன.

அந்த வகையில் முழு ரத்தமானது 1010 நபர்களுக்கும், சிவப்பணுக்கள் 2907 நபர்களுக்கும், தட்டை அணுக்கள் 728 நபர்களுக்கும், பிளாஸ்மா 2056 நபர்களுக்கும் செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

june 17, 2020

MORE STORIES FROM MAALAI EXPRESSView All