22ந் தேதி யாரும் வெளியே வராதீர்கள்

Maalai Express|March 20. 2020

22ந் தேதி யாரும் வெளியே வராதீர்கள்
பால், உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது-பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி, மார்ச் 20- மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 22ந் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தநிலையில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று தொலைக் காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:

பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. கடந்த 2 மாதங்களாக 130 கோடி இந்திய குடிமக்களும் இதை ஒரு தேசிய பிரச்சினையாக கருதி கொரோனா வைரசை கட்டுப்படுத்த தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உள்ளனர். இந்த நோய்க்கிருமியை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதோடு அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

கொரோனா வைரஸ் பாதித்து இருப்பதை போன்று, முதலாவது மற்றும் இரண்டாவது உலகப்போரின் போது கூட இத்தனை நாடுகள் பாதிக்கப்பட்டது இல்லை. இதுபோன்ற தொற்று ஏற்படும் காலகட்டங்களில் நாம் ஆரோக்கியமாக இருந்தால், இந்த உலகம் ஆரோக்கியமாக இருக்கும் என்ற தாரக மந்திரமே நம்மை காப்பாற்றும்.

இதுபோன்ற நோயை புறக்கணிக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் பொறுமை மிகவும் அவசியமாகும்.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 20. 2020

MORE STORIES FROM MAALAI EXPRESSView All