நமது கலாச்சாரத்தின் சமகால அடையாளமாக ராமர் கோயில் விளங்கும்
Kaalaimani|Aug 06, 2020
நமது கலாச்சாரத்தின் சமகால அடையாளமாக ராமர் கோயில் விளங்கும்
பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

லக்னோ, ஆக.5

நமது கலாச்சாரத்தின் சமகால அடையாளமாக ராமர் கோயில் விளங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய பின்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் பிரதமர் தனது பேச்சைத் தொடங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: உலகம் முழுவதும் இன்று ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமர் கோவில் கட்டப்படுவது என்பது வரலாறு; இந்த வரலாற்றுக்கு சான்று பகரும் வகையில் உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கிறது. என்னை இந்த விழாவுக்கு அழைத்ததற்கு மனமார்ந்த நன்றி. ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து கொண்டதை நான் எனது வாழ்வில் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

Aug 06, 2020

MORE STORIES FROM KAALAIMANIView All