அம்மா இருசக்கர வாகன விண்ணப்பம் விருதுநகர் மாவட்டத்தில் அழைப்பு
Kaalaimani|Aug 5, 2020
அம்மா இருசக்கர வாகன விண்ணப்பம் விருதுநகர் மாவட்டத்தில் அழைப்பு
அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் வாகனங்களுக்கு மானியம் பெற விருதுநகர் ஆட்சியர் இரா.கண்ணன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

விருதுநகர், ஆக.4

விருதுநகர் மாவட்டத்திற்கு அம்மா இரு சக்கர வாகனத்திட்டம் 2019-20-ன்கீழ் 2790 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் மானியம் விடுவித்து வழங்குவதற்கு ஏற்கனவே, தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற மீண்டும் வாய்ப்பளிக்கப்படுகிறது. அதன்படி இத்திட்டத்தில் வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000/இதில் எது குறைவோ அந்தத்தொகை பயனாளிகளுக்கு மானியமாக வழங்கப்படும்.

அம்மா இருசக்கர வாகனத்திட்டம் 2019-20 திட்டத்தின்கீழ் பயன் பெறுவதற்கு கீழ்க்கண்ட துறைகளில் பணிபுரியும் பெண்களாக இருத்தல் வேண்டும்.

பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் பெண்கள்

சுயதொழில் புரியும் சிறு வணிகர்கள் (பெண்கள் மட்டும்)

அரசு உதவிபெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்கள், சமுதாய அமைப்புகள்-ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மாவட்ட மக்கள் கற்றல் மையம் (மகமை) ஆகியவற்றில் தொகுப்பூதியம் / தினக்கூலி/ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண்கள். வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், வங்கி வழிநடத்துநர்கள் மற்றும் சமூக சுகாதார பணியாளர்களாக பணிபுரியும் பெண்கள்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

Aug 5, 2020

MORE STORIES FROM KAALAIMANIView All