அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

Kaalaimani|July 8, 2020

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அரியலூர் மாவட்டத்தில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி காணொளிக் காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் இருந்து அடிக்கல் நாட்டினார்.

சென்னை, ஜூலை 7

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், அரியலூர் தெற்குகிராமத்தில் 347 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி புதிதாக கட்டப்படவுள்ளது. மேலும், 89 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பெட் சி.டி. ஸ்கேன் கருவி, 2 நேரியல் முடுக்கி கருவிகள், 4 எம்ஆர்ஐ ஸ்கேன் கருவிகளை அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

கடந்த 2017-18ம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், 2019-20ஆம் கல்வியாண்டில் கரூரில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வந்த ஐஆர்டி மருத்துவக் கல்லூரியானது 2019-20ம் கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 8, 2020

MORE STORIES FROM KAALAIMANIView All