மருத்துவ படிப்பில் அகில இந்திய இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது
Indhu Tamizh Thisai|October 27, 2020
மருத்துவ படிப்பில் அகில இந்திய இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது
தமிழக அரசு, கட்சிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி

மருத்துவ படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவினருக்கு சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தொகுப்புக்கு தமிழகத்தில் இருந்து தெப்பக்குகப்படும் இடங்களில், ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசு சார்பிலும் அதிமுக, திமுக, பாமக, மதிமுக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் போன்ற அரசியல் கட்சிகளும், தனிநபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தனித்தனியாக 13 வழக்குகளை தொடர்ந்திருந்தன. இதில் பாமக மட்டும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 27, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All