வைரஸ் நோய்த் தொற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் தமிழகத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்
Indhu Tamizh Thisai|October 23, 2020
வைரஸ் நோய்த் தொற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் தமிழகத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

புதுக்கோட்டை

கரோனா வைரஸ் நோயால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் அரசு செலவிலேயே இலவசமாக போடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி, வாரியாக சென்று ரோட்ட தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி, புதுக் கோட்டை மாவட்டத்தில் நடந்து வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் சென்னையில் இருந்து நேற்று காலை திருச்சிக்கு விமானத்தில் வந்தார். அங்கிருந்து காரில் விராலிமலைக்கு வந்த முதல்வருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னத்தை முதல்வர் திறந்துவைத்தார்.

அதைத் தொடர்ந்து, புதுக் கோட்டை அருகே கவிநாடு கண்மாய் பகுதிக்கு முதல்வர் வந்தார். காவிரி குண்டாறு திட்டத்துக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 250 மாட்டு வண்டிகள், முளைப்பாரியுடன் விவசாயிகள் திரண்டு முதல் வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, ஒரு மாட்டு வண்டியில் ஏறிய முதல்வர், சிறிது தூரம் வண்டியை ஓட்டினார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 23, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All