பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை
Indhu Tamizh Thisai|October 01, 2020
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை
லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு . திட்டமிட்டு நடந்த செயல் இல்லை என நீதிபதி கருத்து

லக்னோ

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மசூதி இடிக்கப்பட்டது திட்டமிட்ட செயல் இல்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி, கடந்த 1992 டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதியை மையமாகக் கொண்டு, நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக சிவில் வழக்கும், மசூதி இடிப்புக்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

நிலம் தொடர்பான வழக்கில் கடந்த 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

மசூதி இடிப்புக்கு காரணமானவர்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அன்றைய தினம் மேடையில் இருந்த அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது தனி வழக்கும், கரசேவகர்கள் மீது தனி வழக்கும் பதிவு செய்யப்பட்டன. முதலில் உத்தரபிரதேச போலீஸார் விசாரித்த இந்த வழக்குகள் பின்னர் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டன. அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கு ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்திலும் கரசேவகர்கள் மீதான வழக்கு லக்னோ சிறப்பு நீதி மன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வந்தது.

கடந்த 2001-ம் ஆண்டில் ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010-ல் உறுதி செய்தது. இதை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவு

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 01, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All