முகநூல் பதிவை கண்டித்து நள்ளிரவில் பெரும் கலவரம் வெடித்தது - பெங்களூருவில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழப்பு
Indhu Tamizh Thisai|August 13, 2020
முகநூல் பதிவை கண்டித்து நள்ளிரவில் பெரும் கலவரம் வெடித்தது - பெங்களூருவில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழப்பு
60 போலீஸார் உட்பட 200 பேர் படுகாயம் எம்எல்ஏ வீடு, காவல் நிலையங்களுக்கு தீ வைப்பு 250 வாகனங்கள் தீக்கிரை
இரா.வினோத்

பெங்களூரு

முகநூல் பதிவை கண்டித்து பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு ஒரு தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டதால் கலவரம் வெடித்தது. எம்எல்ஏவின் வீடு, காவல் நிலையம், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் அகண்ட சீனிவாச மூர்த்தி. இவரது தங்கை மகன் நவீன்(23), முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக தொடர்ந்து முகநூலில் பதிவுகளை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மத வெறுப்பை தூண்டும் வகையில் ஒருபதிவை வெளியிட்டு, அதை அகண்ட சீனிவாசமூர்த்தியின் பக்கத்திலும் பகிர்ந்ததாக தெரிகிறது.

பல்முனை தாக்குதல்

இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த முஸ்லிம்கள் காடு கொண்டனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீ ஸார் புகாரை ஏற்க மறுத்ததால் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு திரண்டு எம்எல்ஏவுக்கும், போலீஸாருக்கும் எதிராக கோஷம் எழுப்பினர்.

காவல் பைரசந்திராவில் உள்ள எம்எல்ஏவின் வீட்டில் நவீன் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் பரவியது. அங்கு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், நுழைவாயிலை உடைத்து வீட்டுக்குள் நுழைய முயன்றனர். அப்போது சிலர் எம்எல்ஏ வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இந்த தீ வீட்டுக்கும் பரவியது. அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் தீயை அணைத்தனர்.

இதனிடையே அம்பேத்கர் சாலையில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து தாக்கினர். ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த கார், வேன், இரு சக்கர வாகனங்களையும், ஏடிஎம் இயந் திரங்களையும் உடைத்து தீ வைத்தனர். காடுகொண்டனஹள்ளி தேவர் ஜீவனஹள்ளி, காவல் பைர சந்திரா ஆகிய காவல் நிலையங்களுக்கும் தீ வைத்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 13, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All