இந்தியாவில் வைரஸ் தொற்றில் இருந்து 11.45 லட்சம் பேர் குணமடைந்தனர் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா
Indhu Tamizh Thisai|August 03, 2020
இந்தியாவில் வைரஸ் தொற்றில் இருந்து 11.45 லட்சம் பேர் குணமடைந்தனர் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 5,875 பேருக்கு தொற்று உறுதி

புதுடெல்லி / சென்னை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.5 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதில் 11.45 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக 5,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், உயரதிகாரிகள், மருத்துவர்கள் என பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்சவுகானுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவர் 9 நாட்கள் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் டெல்லி அருகே ஹரியாணாவின் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், 'கரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் எனக்கு இருந்தன. பரிசோதனை செய்ததில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. நான் நலமாக உள்ளேன். எனினும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 03, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All