உ.பி.யில் 8 போலீஸாரை சுட்டுக் கொன்ற வழக்கில் தலைமறைவான ரவுடி விகாஸ் துபே கைது

Indhu Tamizh Thisai|July 10, 2020

உ.பி.யில் 8 போலீஸாரை சுட்டுக் கொன்ற வழக்கில் தலைமறைவான ரவுடி விகாஸ் துபே கைது
7 நாள் தேடுதலுக்குப் பின் ம.பி. போலீஸாரிடம் சிக்கினார்
ஆர்.ஷபிமுன்னா

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீஸாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ்துபே நேற்று காலை உஜ்ஜைன் நகரின் பிரபல மஹா காலபைரவர் கோயிலுக்கு வந்தபோது மத்திய பிரதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கான்பூரின் பிக்ரு கிராமத்தில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவில் தன்னை பிடிக்க வந்த போலீஸார் மீது விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டதில் டிஎஸ்பி உட்பட 8 போலீஸார் உயிரிழந்தனர். பின்னர் தப்பியோடிய விகாஸ் துபேவை போலீஸார் தேடி வந்தனர். இவர்களுக்கு உதவியாக ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா மற்றும் மத்திய பிரதேச போலீஸாரும் இணைந்தனர். விகாஸ் துபே தலைக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள பழம்பெரும் மஹா காலபைரவர் கோயிலுக்கு விகாஸ் துபே வந்துள்ளார். விவிஐபிக்கான அனுமதிச்சீட்டு பெற்று பின்புற வாயில் வழியாக வந்தவர். கோயிலின் காவலர் லக்கன் யாதவிடம் "நான் தான் கான்பூர்வாலா விகாஸ் துபே" என உரக்க கூறி உள்ளார். இதையடுத்து கோயில் நிர்வாகிகளுக்கு போனில் லக்கன் தகவல் அளித்துள்ளார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 10, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All