சீன எல்லையில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் ரூ.38,900 கோடிக்கு போர் விமானங்கள் ஏவுகணைகள் கொள்முதலுக்கு ஒப்புதல்

Indhu Tamizh Thisai|July 3, 2020

சீன எல்லையில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் ரூ.38,900 கோடிக்கு போர் விமானங்கள் ஏவுகணைகள் கொள்முதலுக்கு ஒப்புதல்
80 சதவீதம் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்க முடிவு

புதுடெல்லி

சீன எல்லையில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் ரூ.38,900 கோடிக்கு புதிதாக போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆயுதங்களை வாங்க மத்திய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் நேற்று ஒப்புதல் வழங்கியது. இதில், 80 சதவீத தள வாடங்களை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாத தொடக்கத்தில் இமய மலையின் கிழக்கு லடாக் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் எல்லையில் போர் பதற்றம் எழுந்தது. மே 5, 6-ம் தேதிகளில் இரு தரப்புக்கும் இடையே லேசான கைகலப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் வெடித்தது. இதில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

எல்லையில் படைகள் குவிப்பு

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 3, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All