தடுப்பு மருந்து இல்லை; தனிமையில் இருந்தால் நோயை தடுத்துவிடலாம் தமிழகத்தில் 67 பேருக்கு கரோனா பாதிப்பு

Indhu Tamizh Thisai|March 31, 2020

தடுப்பு மருந்து இல்லை; தனிமையில் இருந்தால் நோயை தடுத்துவிடலாம் தமிழகத்தில் 67 பேருக்கு கரோனா பாதிப்பு
அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க முதல்வர் வேண்டுகோள்

சென்னை. தமிழகத்தில் 67 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் முழுமையாக தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். வீடுகளில் 43,537 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக் கப்படுகின்றனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலர் ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

ஆய்வுக்கூட்ட முடிவில் செய்தி யாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது: கரோனா வைரஸ் தொற்றுநோய் உலகம் முழுவதும் 199 நாடுகளில் பரவியுள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் வைரஸால் இறந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்து இல்லை. கரோனா வைரஸ் கடுமையான தொற்று நோய். அதற்கு மருந்தே இல்லை. தனிமைதான் இதற்கான தடுப்பு மருந்து.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 31, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All