பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு

Indhu Tamizh Thisai|March 22, 2020

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை

புதுடெல்லி கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பேருந்து, ரயில்கள் இயங்காது என்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது மேலும் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றன. குறிப்பாக பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19-ம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, "கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஊழியர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும்.

22-ம் தேதி (இன்று) மக்களுக்காக மக்களால் ஊரடங்கு உத்தரவு (மக்கள் ஊரடங்கு) பிறப்பித்தது போல நாட்டு மக்கள் கருத வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டும் வெளியில் செல்லுங்கள்” என கேட்டுக் கொண்டார்.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 22, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All