கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் ஊரடங்கு கடைபிடிப்பு தமிழகத்தில் நாளை பேருந்து, ரயில் ஓடாது

Indhu Tamizh Thisai|March 21, 2020

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் ஊரடங்கு கடைபிடிப்பு தமிழகத்தில் நாளை பேருந்து, ரயில் ஓடாது
• முதல்வர் பழனிசாமி அறிவிப்பு . கடைகள், ஓட்டல்கள் மூடல் . மாநில எல்லைகள் அடைப்பு

பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறி விப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை (22-ம் தேதி ) அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், ஆட்டோ , டாக்ஸிகள் ஓடாது என்றும் கடைகள், ஓட்டல்கள் மூடப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களின் எல்லைகள் இன்று முதல் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, "முடிந்தவரை அனைவரும் வீட்டில் இருந்தபடியே அனைத்து வேலைகளையும் செய்ய முயற்சி செய்யுங் கள். மிகவும் அவசியம் என கருதினால் மட்டும் வீட்டைவிட்டு வெளியில் செல்லுங்கள். ஞாயிற்றுக்கிழமை (நாளை) மக்களால், மக்களுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததுபோல கருதிக் கொள் ளுங்கள். அன்று யாரும் வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள். இது இந்த வைரஸிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கான முயற்சியின் சோதனையாக அமையும்” என்று அறிவுறுத்தி இருந்தார்.

ஆளுநர் வேண்டுகோள்

பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவிப்பை அரசியல் தலைவர்கள், வணிகர் கள், தொழில் துறையினர், திரைப்பட நடிகர்கள் என பல்வேறு தரப் பினரும் வரவேற்றுள்ளனர். பிரதமரின் அழைப்பை ஏற்று தமிழக மக்கள் அனைவரும் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் ஊரடங்கு அறிவிப்பின்படி தமிழகத்தில் நாளை அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 21, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All