நாடாளுமன்றம் முன்னதாகவே ஒத்திவைப்பு
Dinamani Chennai|September 24, 2020
நாடாளுமன்றம் முன்னதாகவே ஒத்திவைப்பு
உறுப்பினர்களின் செயல்பாடு: வெங்கய்ய நாயுடு அதிருப்தி

புது தில்லி, செப். 23: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டன. இதன் மூலமாக திட்டமிடப்பட்டதற்கு 8 நாள்களுக்கு முன்னதாகவே மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கிடையே நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடும் பாதுகாப்பு விதிமுறைகளுடன் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. மழைக்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்கும் எம்.பி.க்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் மாநிலங்களவை அமர்வு காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணிவரை நடைபெற்றது.

மக்களவை அமர்வு பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. மேலும், கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொண்ட பிறகே எம்.பி.க் கள், அதிகாரிகள், ஊடகத் துறையினர் உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் நுழைவதற்கும், கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கும் அனுமதிக்கப்பட்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: கரோனா நோய்த்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு மக்களவை, மாநிலங்களவையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி வரை மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டி ருந்தது. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுப்பின்றி கூட்டத் தொடர் நடைபெற்றது.

எனினும், நாடாளுமன்றத்தில் பணியாற்றிவந்த ஊழியர்களுக்கும் எம்.பி.க்கள் சிலருக்கும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதைக் கருத்தில் கொண்டும் எம்.பி.க்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் மக்களவையும், மாநிலங்களவையும் புதன்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 24, 2020

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All