மாநிலங்களவையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு
Dinamani Chennai|September 23, 2020
மாநிலங்களவையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு
8 எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்

புது தில்லி, செப். 22: மாநிலங்களவையில் விதிகளை மீறி நடந்து கொண்டதற்காக 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யும் வரையிலும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

வேளாண் விளைபொருள் வர்த்தக ஊக்குவிப்பு மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் 8 பேர்களை மழைக்காலக் கூட்டத் தொடரின் அமர்வுகளில் பங்கேற்கத் தடை விதித்து அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவை கூடியதும் 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, தேசிய வாத காங்கிரஸ், சிவசேனை உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பில் ஈடுபட்டது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும்போது, எம்.பி.க்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரையிலும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம்.

அத்துடன், குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் குறைவாக தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் விளைபொருள்களை கொள் முதல் செய்வதைத் தடுக்க வேண்டும்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 23, 2020

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All