அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி
Dinamani Chennai|August 13, 2020
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் (55) போட்டியிடுகிறார். அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸை எதிர்த்து அவர் தேர்தலில் களம் காண்கிறார்.

வாஷிங்டன்/புது தில்லி, ஆக.12:

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இத்தகைய சூழலில் தன்னுடன் இணைந்து துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளதாக ஜோ பிடன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வந்த சூழலில் கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜோ பிடன் வெளியிட்ட அறிவிப்பில், 'நாட்டில் உள்ள மிகச் சிறந்த மக்கள் பிரதிநிதிகளில் ஒருவர் கமலா ஹாரிஸ். எந்தவித அச்சமும் இல்லாத போராளி. அவருடன் இணைந்து டிரம்ப்பை தோற்கடித்து நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர முடியும் என நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கமலா ஹாரிஸ் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், 'அமெரிக்காவுக்காக தொடர்ந்து போராடி வருபவர் ஜோ பிடன். அதிபராக நாட்டை வளர்ச்சிப் பாதையில் கட்டமைக்கும் திறன் அவருக்கு உள்ளது. அவருடன் இணைந்து தேர்தலை எதிர் கொள்வது பெருமைக்குரியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

காத்திருக்கும் சாதனைகள்:கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். அவரின் தாயார் இந்தியாவைச் சேர்ந்தவர். துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், முதல் இந்திய அமெரிக்க துணை அதிபர், முதல் ஆப் பிரிக்க அமெரிக்க துணை அதிபர் உள்ளிட்ட பெருமைகள் அவரை வந்துசேரும்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 13, 2020

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All