முழு பொது முடக்கம்: வீடுகளில் முடங்கிய மக்கள்

Dinamani Chennai|July 13, 2020

முழு பொது முடக்கம்: வீடுகளில் முடங்கிய மக்கள்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட தளர்வு இல்லாத முழு பொது முடக்கத்தினால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.

சென்னை, ஜூலை 12

மாநிலம் முழுவதும் கடந்த 5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.இந்நிலையில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் (ஜூலை 12-ஆம் தேதி) முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

பலத்த பாதுகாப்பு: முழு பொது முடக்கம் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மருந்து, பால், பத்திரிகைகள் விற்பனைக் கடைகள் தவிர்த்து பிற கடைகள் திறப்பதற்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த கடைகளை மூடுமாறு போலீஸார் எச்சரித்தனர்.

மேலும் சனிக்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் மருத்துவத்துறை, பத்திரிகை துறை, பால் ஆகியவற்றின் வாகனங்கள் செல்வதற்கு மட்டும் காவல்துறையினர் அனுமதித்தனர். பிற வாகனங்கள் செல்வதற்கு காவல் துறையினர் தடை விதித்தனர். ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லைகளையும் போலீஸார் மூடினர்.

கரோனா பகுதிகளில் சிறப்பு கவனம்: தற்போது கரோனா பரவும்பகு திகளில் காவல்துறை சிறப்புக் கவனம் செலுத்தியது. இங்கு பிற பகுதிகளைக் காட்டிலும் போலீஸார் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் இப் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, வழக்குப் பதியப்பட்டது. அதேபோல தமிழக சுகாதாரத்துறையின் உத்தரவுகளை மீறியவர்கள் மீதும் போலீஸார் தொற்று நோய் பரவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 13, 2020

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All