சென்னையில் 29 ஏரிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள்

Dinamani Chennai|March 22, 2020

சென்னையில் 29 ஏரிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள்
சென்னை, மார்ச் 21:சென்னை மாநகரில் இருந்த 29 பெரிய ஏரிகள் அழிக்கப்பட்டு அதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. இதில், அதிகபட்சமாக அம்பத்தூர் ஏரியை ஆக்கிரமித்து மட்டும் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மற்ற நகரங்களை விட மக்கள்தொகை அதிகமாகவும், நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும் சென்னைவிளங்குகிறது. எந்த அளவுக்கு சென்னை வளர்ச்சி பெற்றிருக்கிறதோ, அதே அளவுக்கு சென்னையில் இருந்த நீர் நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 1906-ஆம் ஆண்டு நிலவரப்படி, 474 நீர்நிலைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. வளர்ச்சி என்ற பெயரில் தொடர்ச்சியாக ஏரிகள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டு குடியிருப்புகள், தொழிற்சாலைகள் கட்டப்படுகின்றன. தற்போது சென்னை மாநகர்ப் பகுதியில் 40-க்கும் குறைவான நீர்நிலைகளே எஞ்சி உள்ளன.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 22, 2020

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All