80 வயது பல்கலை வித்தகர் கு. அரங்கசாமி!

Unmai|April 01, 2020

80 வயது பல்கலை வித்தகர் கு. அரங்கசாமி!
ஓய்வு என்றால் ஓய்ந்திருப்பது அல்ல; மற்றொரு வேலையைச் செய்வதுதான் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.
உடுமலை வடிவேல்

அவரே அப்படி நடந்தும் காட்டிவருகிறார். அப்படி, பள்ளிக்கூடம் எனக்குப் பணி ஓய்வு வழங்கிவிட்டாலும் நான் ஓய்வே எடுத்ததில்லை என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார் சென்னை ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியில், உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி தற்போது 80 வயதை எட்டியிருக்கும் அரங்கசாமி.

அரங்கசாமி, தற்போதும் காலையில் இளைய தலைமுறையினருடன் இணைந்து கைப்பந்து, பூப்பந்து, இறகுப் பந்து என தினமும் உடற்பயிற்சியை விளையாட்டாகவே மேற்கொண்டு வருகிறார்.

அவரது வயதை எண்ணி நம்ப இயலாமல் அப்படியா! என்று நாம் வியப்போடு கேட்டால், 2009 ஆம் ஆண்டிலிருந்து இப்ப வரைக்கும், 4 முறை மாநிலப் போட்டிகளிலும், 4 முறை தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்துகிட்டு இதுவரை 45 பதக்கங்களும் 19 விருதுகளும் வாங்கியிருக்கேன் என்று பெருமையுடன் அவற்றை அள்ளிக்காட்டி, நமது வியப்புக்கு மேலும் வியப்பைக் கூட்டுகிறார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

April 01, 2020