போதுமடா இந்த ஒர்க் ஃப்ரம் ஹோம்!
Nakkheeran|October, 24, 2020
போதுமடா இந்த ஒர்க் ஃப்ரம் ஹோம்!
ஆன்லைன் அவஸ்தை!
சேகுவேரா

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஐ.டி. தொழிலாளர்கள் படும் துயரங்கள் குறித்து, 'கடந்த வாரம் நக்கீரன் இணையத்தில் ஒரு கட்டுரை வெளியானது. அது தொழில் நுட்பத் துறையினர் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்தக் கட்டுரையை படித்த வாசகர்கள் பலரும், தங்களின் அழுத்தமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா காலத்தில், அது எளிய மக்களை எப்படியெல்லாம் வதைக்கிறது, வலிமையான சக்திகள் எப்படியெல்லாம் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

தொழில் நிறுவனங்கள் எவ்வாறெல்லாம் கொரோனா மூலம் லாபம் பார்க்கின்றன என்று விவரிக்கும் ஏ.ஐ.சி.சி.டி.யு. கணேஷ், "ஐ.டி ஊழியர்களுக்கும் இது சோதனைக் காலம். அலுவலகத்தில் வேலை பார்க்கும் பொழுது பதவி உயர்வு, சம்பள உயர்வு வேண்டும் என்பதற்காக அதிகமாக வேலை செய்வார்கள். ஆனால் தற்போது இந்த ஊரடங்கில் தங்களின் வேலையை நிலைநிறுத்திக் கொள்ளவே அதிகநேரம் அவர்கள் வேலைபார்க்க வேண்டியிருக்கிறது. தொழிலாளர் நல சட்டம் ஒரு மனிதன் 8 மணி நேரம்தான் வேலை பார்க்கவேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இந்த கொரோனா காலத்தில் இரவு, பகல் பாராது உழைக்கிறார்கள். வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையால், ஒவ்வொரு மணி நேரமும் உயர் அதிகாரி தொலைபேசியில் என்ன நடக்கிறது? வேலை முடிந்ததா?' என்று சோதனை செய்து கொண்டே இருப்பார். இதனால் அவர்கள் பயந்து கண்கொத்திப் பாம்பைப் போல கணினியின் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October, 24, 2020