800 - விழுந்தது விஜய்சேதுபதி விக்கெட்!
Nakkheeran|October, 24, 2020
800 - விழுந்தது விஜய்சேதுபதி விக்கெட்!
தொடரும் வக்கிரத் தாக்குதல்!
ஈ.பா.பரமேஷ்வரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான '800-ல் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எட்டு திசைகளிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. டைரக்டர்கள் பாராதிராஜா, சேரன், சீனு ராமசாமி ஆகியோர் இனத்துரோகியின் வரலாற்றுப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்றனர்.

கி.வீரமணி, டாக்டர் ராமதாஸ், தொல்.திருமா வளவன் போன்ற அரசியல் தலைவர்கள், விஜய் சேதுபதி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் சரத்குமார், ராதிகா, குஷ்பு போன்ற சினிமா பிரபலங்கள் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இன்னும் சில சினிமா பிரபலங்களும் வி. சே.வுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருந்தாலும் அரசியல் நிலவரம் அவர்களை அச்சுறுத்தியது.

அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் வி. சே.வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து மோதல்கள் நடந்தன. கொடுங்கோலன் ராஜ பக்சேவின் பினாமியான சுபாஷ்கரன் அல்லிராஜா, போது, விஜய்யை வைத்து 'கத்தி' சினிமாவை ஆரம்பித்த ஆவேசமானவர்கள் அடங்கிப் போனார்கள். இப்போது விஜய் சேதுபதியைக் குறி வைத்திருக்கிறார்கள் என பலரது ஃபேஸ்புக்குகளில் பளிச்சிட்டது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October, 24, 2020