என்றும் நம்மோடு இருப்பவர்
Kalki|August 16, 2020
என்றும் நம்மோடு இருப்பவர்
சா.கந்தசாமி என்றதும் நம் நினைவில் வந்து தங்குவது, வெண்புறா தன் சிறகுகளை விரிப்பது போன்ற வசீகரச் சிகையலங்காரமும் ஓங்கி ஒலிக்கும் விவாதக் குரலும்தான்! கடந்த முப்பது ஆண்டுகளாக அவரோடு நான் நட்பு கொண்டிருக்கிறேன். அவர் ஓடும் நதியைப் போல எப்போதும் உயிர்ப்புடன் இருந்தவர்.
பாரதி பாலன்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாகித்ய அகாதமிக்கு, ரயில் மற்றும் ரயில் பயண அனுபவங்களைப் பேசும் சிறுகதைகளைத் தொகுத்து வழங்கும் திட்டத்தினைக் கொடுத்தார். இதேபோல் வேறு சிலரும் சில திட்டங்களைக் கொடுத்தனர். மற்றவர்கள் இன்னும் பணியைத் தொடங்காத நிலையில், காலக் கெடுவுக்கு முன்னதாகவே அதை முடித்துக் கொடுத்து விட்டார். தன்னுடைய நண்பர் எழுத்தாளர் அசோக மித்திரன் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றினையும், 'தமிழில் சுய சரித்திரங்கள்' என்ற நூலினையும் சாகித்ய அகாதமிக்காகச் சமீபத்தில் மிகக் குறுகிய காலத்தில் எழுதி வழங்கியுள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாகித்திய அகாதமியின் இலக்கிய விழாவிற்கு, புது தில்லி வந்திருந்தார். அப்போது நான் அவருடன் இருந்தேன். தம் வயது ஒத்த, மூத்த இந்திய மொழிகளைச் சார்ந்த படைப்பாளிகள் ஒவ்வொருவரையும் தேடித் தேடிப் போய்ச் சந்தித்துப் பேசினார். 'இவங்களை எல்லாம் இனி எப்பய்யா போய்ப் பார்க்கப் போகி றோம்?' என்றார் என்னிடம்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 16, 2020