சின்னக் குயிலி, பெரிய குயிலி
Kalki|August 16, 2020
சின்னக் குயிலி, பெரிய குயிலி
எல்லாப் பதிப்பாளர்களும் படிப்பாளிகளாக இருப்பதில்லை. பெரும்பாலோர் எழுத்துக்களைக் கௌரவித்து அச்சிட்டு வழங்குவதோடு நின்று விடுவார்கள். இந்த நூலின் ஆசிரியர் 'விஜயா' மு.வேலாயுதம் வித்தியாசமானவர். ஆழமான படிப்பாளி என்பதோடு பலதரப்பட்ட எழுத்து வேந்தர்களோடும் இலக்கிய வாதிகளோடும் நெருங்கிப் பழகுகிற பெரும் பேறு பெற்றவரும் கூட.
சுப்ர.பாலன்

வளர்ந்த நாட்களில் பெரும்பாலான தமிழ் ஆர்வ இளைஞர்களைப்போல் இவரும் டாக்டர் மு.வ.வின் எழுத்துக்களால் பெரிதும் கவரப்பட்டார். இத்தொகுப் பின் முதல் கட்டுரையே மு.வ.வைப் பற்றிய தாக இடம் பெற்றிருக்கிறது. அவருடைய அறுபதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடி மகிழ நண்பர்கள் ஆசைப்பட்டபோது, 'யான் எனது என்ற செருக்குக்கு இடம்தரும் எந்த விழாவும் குறைய வேண்டும். சமுதாய விழாக்கள் பெருகவேண்டும்' என்று சொல்லி மறத்துவிட்டாராம் டாக்டர் மு.வ. உடல் நலம் குன்றிய கடைசி நாட்களில் அவரை சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்க அழைத்துச் சென்றிருக்கிறார்கள். போகும் வழியில் தாம் பணியாற்றிய பச்சையப்பன் கல்லூரி அருகே கடந்து போனபோது காரை நிறுத்தச் சொன்னாராம். கல்லூரி வளாகத்தைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினாராம்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 16, 2020