பாடலின் உயிர்த்துடிப்பை உணர்ந்தவர்!
Iniya Udhayam|October 2020
பாடலின் உயிர்த்துடிப்பை உணர்ந்தவர்!
எஸ்.பி.பி. மிகவும் கனிவானவர். யாருக்கும் சிறு தீங்கும் நினைக்காதவர். தான் கடைசியாக ஆன்லைன் மூலம் கலந்துகொண்ட ஜப்பான் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் கூட.... "கொரோனாவைப் பற்றி நாம் தப்பாய்ப் பேசத் தேவையில்லை. நமக்கது சாபம். நாம் செய்த தப்புக்கு அது தண்டனை. இயற்கையை நாம் மிகவும் வஞ்சித்துவிட்டோம்.
பழநிபாரதி

என் ஆள், என் ஜாதி, என் தேசம், என் கலர் என்பதெல்லாம் சாதாரண ஆட்கள் பேசுவது. எல்லோரும் என் ஆட்கள் என்று நினைத்து நம்மிடம் அதிகப்படியாக இருப்பதைப் பகிர்ந்து கொள்ளலாம். பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்றால் தீமை செய்யாமலாவது இருக்கலாம். இப்போது கொரோனாவால் இந்த நன்மை நிகழ்வதைப் பார்க்கிறேன். பலர் பகிர்கிறார்கள்"

என்று கொரோனா தொற்றுக் கிருமியைப் பழிப்பதைக்கூட அவர் மனம் ஏற்கவில்லை. மனம் நெகிழ்கிறது. இப்படி எல்லாருக்கும் நல்லவராக ஒரு மனிதனால் வாழமுடியுமா? முடியும் என்று நிரூபித்த வாழ்வு அவருடையது அவர் வெளியே தெரியாமல் பலருக்கும் பேருள்ளத்தோடு உதவியிருக்கிறார். அதுபற்றி இப்போது பலரும் சொல்லிக்கொண்டிருப் பதைக் கேட்கும் போது, அவரது இதயத்தின் விசாலம் வியக்க வைக்கிறது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 2020