கொழுப்பு மட்டுமே காரணம் இல்லை...

Kungumam Doctor|01-06-2020

கொழுப்பு மட்டுமே காரணம் இல்லை...
இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அதிகம் பயப்படுவது Heart attack. இந்த மாரடைப்பு நோய்க்கு ஒரே காரணம் கொலஸ்ட்ரால் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதய ரத்த நாளங்கள் அடைத்துக் கொள்வதற்கும், சில நேரங்களில் மாரடைப்பிற்கும், உடலிலுள்ள அதிக கொழுப்புதான் காரணம் என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டுமிருக்கி றோம். ஆனால், உண்மை அதுவல்ல. கொழுப்பைத் தாண்டி, பல காரணிகள் இதயநோயை ஏற்படுத்துகின்றன.
உஷா நாராயணன்

உண்மையில் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் கொழுப்புப் பொருள் ஆயிரக்கணக்கான உடல் செயல்பாடுகளைச் செய்ய பயன்படுகிறது. 75 சதவீத கொழுப்பு கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 25 சதவீத கொழுப்பு மட்டுமே நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படுகிறது. கொழுப்பு, உடலில் சவ்வுகளை உருவாக்க பயன்படுவதோடு, போதுமான ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு இரண்டும் இருக்கிறது. ஆனால், நாம் காலஸ்ட்ரால் என்ற வார்த்தையை கெட்ட கொழுப்பை குறிப்பிட பயன்படுத்துகிறோம். அதுவே நம்முடைய இதய நோய் பலவற்றிற்கும் காரணமாக கற்பித்துக் கொள்கிறோம்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

01-06-2020