முகமற்றவள்
முகமற்றவள்
வீதியில் நுழைந்த போது சின்னதொரு பதட்டம் இயல்பாகவே மாலதியின் உடல் முழுக்க ஓடியது. வண்டியின் வேகத்தைக் குறைத் தவளுக்கு வீட்டிற்குத் திரும்பும் கடைசி திருப்பத்தில் இரண்டு மின் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடந்ததைப் பார்த்ததும் பதட்டம் முன்னைவிடவும் அதிகமானது.
லஷ்மி சரவணக்குமார்

இங்கு குடிவந்த பிறகான இந்த சில நாட்களில் இவளின் தோற்றத்திலேயே சாதியை அவர்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். வெஜ் ஒன்லி பலகை இல்லாத மூன்று நான்கு வீடுகளில் ஒன்றில் தான் இவள் தன் குடும்பத்துடன் குடிவந்திருந்தாள். மாலதிக்கு விவாகரத்து ஆகி சில மாதங்கள் தான் ஆகின்றன. ஒரு மாறுதலுக்காக வேண்டியே அம்மா அப்பாவுடன் இங்கு வந்திருந்தாள். அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒருபோதும் அவளுக்கு விருப்பம் இருந்திருக்கவில்லை , அதனாலேயே தனி வீடாகப் பார்த்து இங்கு வந்தார்கள். இங்கும் அவர்களோடு பேச ஒருவருமில்லை . அந்தத் தனிமை தெரியாதபடி முன் வாசலுக்கு அவ்வப்போது வரும் நாய்களும் பின் வாசலுக்கு வரும் பூனையும் அவர்களோடு தனித்துவமான மொழியில் பேசிக் கொண்டிருந்தன.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 2020