சொற்களால் நிரம்பிய நடை பாதை...

Kanaiyazhi|May 2020

சொற்களால் நிரம்பிய நடை பாதை...
எப்போதும் கருப்புக் கண்ணாடி அணிந்து நடைப்பயிற்சிக்கு வரும் அவன் நடக்கையில் யாரைப் பார்த்துச் செல்கிறான் என்று வெளியுலகுக்குத் தெரியாது.

கருப்பு கண்ணாடியை அவன் ஏன் அணிந்து வருகிறான் என்பதற்கு நடைப்பயிற்சிக்கு வரும் பெண்கள் மத்தியில் சுமார் நூற்றுக்கணக்கான காரணங்கள் விவாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம், என்பது, அவன் உள்ளே நுழையும் போதே குழு குழுவாக நடக்கும் பெண்கள் ஒருவருக்கொருவர் அர்த்தம் தெறிக்கும் பார்வையைப் பரிமாறிக் கொண்டு தங்களுக்குள் சிரித்துக் கொள்வதிலிருந்து தெரியும். யாரையும் லட்சியம் செய்யாமல் அவன் நடந்தபடியே இருப்பான்.

அந்தப் பெரியவர். கையில் ஆங்கிலத் தமிழ் தினசரிகள் நிரம்பி இருக்க எதிர்ப்படும் சமயம் அவன் நடப்பதை நிறுத்திக்கொண்டு, மரங்கள் தரும் நிழலடியில் இருந்த, அந்த குறிப்பிட்ட சிமெண்ட் இருக்கையில் வந்தமர்ந்து கொள்வான். பெரியவரும் நடைபாதையில் ஒரு சுற்று சுற்றிவிட்டு அவன் அருகே வந்து அமர்ந்து கொள்வது வழக்கம். அவர் தினசரியைப் பார்த்து விட்டு அவனிடம் ஏதோ சொல்வார். அவன் கண்ணாடியைக் கழற்றாமல் தன்னிடம் இருக்கும் அலைபேசியில் எதையோ பார்த்து விட்டு பதில் சொல்வான். சமயங்களில் பெரியவர் சொல்லும் எண்ணை அழைத்து அவர் சார்பில் பேசுவான். அவர்களின் சமிக்ஞைகள் மிகு உரையாடல் பிரத்தியேகமானது.

அடர் மரங்கள், வண்ணமலர் கொடிகள், அழகு செடிகள் நிறைந்த பூங்கா அது. மத்தியில் அமைந்துள்ள நீள் செவ்வக சிமெண்ட் நடைபாதையில் காலையிலும் மாலையிலும் பார்வையாளர்கள் நடந்தபடி இருப்பார்கள். காலை நடைப் பயிற்சிக்கு வந்தவர்களில் சிலர் மாலையும் வருவார்கள். அவர்களில் நிறைய பேர் நடப்பதை ஒரு சடங்காக எண்ணி வருபவர்கள்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 2020