நோஹ பௌம்பாக் இன் Mistress Americo

Kanaiyazhi|May 2020

நோஹ பௌம்பாக் இன் Mistress Americo
வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் வலிகளை அவனது போக்கிலே நகைச்சுவையாகச் சினிமா கலையில் செலுத்திய இயக்குநர்கள் சிலரே உண்டு.
சி.பிரசாத் சுந்தர்

அப்பட்டியலில் பஸ்டர் கீட்டன்(Buster Keaton), சார்லி சாப்ளினிற்கு (Charlie Chaplin) பிறகு உட்டி ஆலனே (Woody Allen) அவ்விடத்தைப் பல வருடங்களாக நிரப்பினார். அவருக்குப் பிறகு வெகு சிலரே அவ்விடத்தில் நிலைத்து இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நோஹ பெளம்பாக் (Noah Baumbach). எளிமையாக ஒரு திரைக்கதையில் நகைச்சுவை உணர்வோடு மனிதனின் அகப் புறச் சிக்கல்களை நோஹ பெளம்பாக் தொடர்ந்து அவரது படங்களில் முன்னிறுத்துகிறார். கடந்த சில வருடங்களாக அவர் நகைச்சுவை உணர்வை விட்டு ட்ராமா ஜென்னரிலே (Drama genre) செயல்பட்டாலும் மனிதனின் போராட்டங்களை அவர் தனது படங்களின் மூலம் தொடர்ந்து பதிவு செய்கிறார்.

சமூகத்திற்குத் தேவையான நிகழ்வையே ஒரு எழுத்தாளன் தனது எழுத்தின் மூலம் புனைவாகவோ புனைவற்றதாகவோ சமூகத்திற்குத் திணிக்க முயல்வான். இருப்பினும், அவனது வாழ்விலும் அவன் வாழ நினைத்த உலகத்தை, அவன் சந்தித்த மனிதர்களை, அவனது ஆசைகளை, அவனது காதல்களை அவன் தனது சுயநலத்திற்காக தனது விருப்பத்தைத் தனது எழுத்தில் வெளிப்படுத்துவான். வணிக ரீதியாக அது அவனது வாழ்க்கையைச் செம்மைபடுத்தா விட்டாலும், விருப்பத்தை நிகழ்த்திய பெருமூச்சு அவனிடம் என்றுமே நிலைத்திருக்கும்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 2020