கிஃப்ட் திலபியா மீன் வளர்ப்புக்கு 40 சதவீதம் மானியம்
Agri Doctor|October 28, 2020
கிஃப்ட் திலபியா மீன் வளர்ப்புக்கு 40 சதவீதம் மானியம்
கிஃப்ட் திலபியா மீன் வளர்ப்புக்கு 40 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது.

திருச்சி, அக்.27

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் (என்ஏடிபி) விவசாய நிலங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்தை பல்வகைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனால் விவசாயிகளுக்கு அனைத்து பருவங்களிலும் உறுதியான வருமானம் கிடைக்கும். வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கு புத்துயிர் அளிப்பதற்காக 11வது ஐந்தாண்டு திட்டத்தின் தொடக்கத்திலிருந்து சிறப்பு கூடுதல் உதவித் திட்டத்துடன் மத்திய அரசால் தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், மாவட்ட வேளாண் திட்டங்கள் டிஏபி), மாநில வேளாண் திட்டம் (எஸ்ஏபி) மற்றும் மாநில வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் எஸ்ஐஐடிபி ஆகியவற்றை உருவாக்க மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன. மாநில வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் முக்கிய நோக்கம், தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் விவசாய மேம்பாட்டுக் கான உள்கட்டமைப்பை அடையாளம் காண்பதாகும்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 28, 2020

MORE STORIES FROM AGRI DOCTORView All