குடியிருப்புகளில் யானைகள் நுழையாமல் தடுக்க நீடித்த தீர்வை உருவாக்க அரசு உறுதி
Agri Doctor|August 12, 2020
குடியிருப்புகளில் யானைகள் நுழையாமல் தடுக்க நீடித்த தீர்வை உருவாக்க அரசு உறுதி
பிரகாஷ் ஜவடேகர் பேச்சு

புது தில்லி, ஆக.11

மனிதர்கள் வாழும் பகுதியில் யானைகள் நுழையாமல் தடுப்பதற்கு நீடித்த கால அடிப்படையில் பயன் தரக் கூடிய தீர்வை உருவாக்க அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு விலங்குகள் வருவதைத் தடுக்கும் நோக்கில் காடுகளிலேயே விலங்குகளுக்கு உணவும், தண்ணீரும் கிடைக்கச் செய்வதற்கு அரசு முழு வீச்சில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

உலக யானைகள் தினத்தை ஒட்டி புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இதைத் தெரிவித்தார்.

யானைகள் மற்றும் பிற விலங்குகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் எடுப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்று அமைச்சர் கூறினார். அதற்காக உடனடிப் பலன் தரக் கூடிய, நடைமுறை சாத்தியமான, குறைந்த செலவிலான நடைமுறை களை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வன அலுவலர்களின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அவர் வலியுறுத்தினார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 12, 2020

MORE STORIES FROM AGRI DOCTORView All