يحاول ذهب - حر
'வந்தே மாதரம்' 150...
November 07, 2025
|Dinamani Tiruvallur
இந்தியத் திருநாட்டின் வரலாற்றின் நீண்ட நெடிய ஊக்கமளிக்கும் பயணத்தில், பாடல்களும் கலைகளும் இயக்கங்களின் உணர்வாக மாறி மக்களின் உணர்வுகளை செயல்பாடாக மாற்றிய ஏராளமான தருணங்கள் இருந்துள்ளன. சத்ரபதி சிவாஜி பேரரசர் படையின் போர்ப் பாடல்களாகட்டும், சுதந்திரப் போராட்டத்தின் போது இசைக்கப்பட்ட தேசியப் பாடல்களாகட்டும், அவசரகால நிலை பிரகடனத்தின் போது இளைஞர்களின் மெல்லிசைகளாகட்டும், இந்திய சமூகத்தில் பாடல்கள் எப்போதுமே கூட்டு உணர்வையும் ஒற்றுமையையும் தூண்டுகின்றன.
அத்தகைய பாடல்களுள் ஒன்றுதான் இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'. இதன் வரலாறு போர்க்களத்தில் தொடங்கவில்லை. மாறாக, அறிஞர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயவின் அமைதியான அதே வேளையில் உறுதியான மனதில் உதித்தது. 1875-ஆம் ஆண்டு, ஜகதாத்ரி பூஜையின் (கார்த்திகை சுக்ல நவமி அல்லது அக்ஷய நவமி) புனித நாளில், அவர் இயற்றிய ஒரு பாடல், தேச விடுதலையின் ஒருமித்த கீதமாக மாறியது. அந்தப் புனித வரிகளில், அவர் பாரதத்தின் ஆழமான நாகரிக வேர்களிலிருந்து, அதர்வண வேதத்தின் 'மாதா பூமிஹ் புத்ரோ அஹம் பிருதிவ்யா' ('பூமி எனது தாய், நான் அவரது மகன்) பிரகடனத்திலிருந்து தேவி மகாத்மியரின் தெய்வீகத் தாயின் வழிபாடு வரை உத்வேகம் பெற்றார்.
பங்கிமின் வார்த்தைகள் பிரார்த்தனையாகவும், தீர்க்கதரிசனத்துடனும் இருந்தன. 'வந்தே மாதரம்', தேசியப் பாடல் அல்லது சுதந்திரப் போராட்டத்தின் உயிர் நாடி மட்டுமல்ல. பங்கிம் சந்திரரின் கலாசார தேசியவாதத்தின் முதல் பிரகடனமாக இருந்தது. இந்தியா என்பது புவியியல் சார்ந்த பகுதி மட்டுமல்ல என்றும், மாறாக அது புவி-கலாசார நாகரிகமாகவும், வரைபடத்தில் கோடுகளால் இணைக்கப்பட்டிருப்பதுடன், கலாசாரம், நினைவுகள், தியாகம், வீரம் மற்றும் தாய்மையைப் பகிர்ந்து கொண்டுள்ளதையும் நமக்கு நினைவூட்டுகிறது. இது வெறும் நிலம் அல்ல; இது ஒரு தீர்த்தம்; பக்தியாலும், கடமையாலும் தூய்மைப்படுத்தப்பட்ட புனித மண்.
மகரிஷி அரவிந்தர் கூறியவாறு, இந்தியாவின் நவீன துறவியாக விளங்கிய பங்கிம், தனது வரிகள் மூலம் நாட்டு மக்களின் உணர்வைத் தட்டி எழுப்பினார். ஆனந்த மடம் என்ற அவரது படைப்பு, புதினம் மட்டுமின்றி, தூங்கிக் கொண்டிருந்த தேசத்தை அதன் தெய்வீக வலிமையை மீண்டும் கண்டுபிடிக்கத் தூண்டிய ஒரு மந்திரமானது.
هذه القصة من طبعة November 07, 2025 من Dinamani Tiruvallur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
காசி - தமிழ் சங்கமம் - தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை: எல்.முருகன்
காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்
தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
முதுநிலை மருத்துவம்: கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு
முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் இடங்கள் பெற்றவர்கள், கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Tiruvallur
அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
குரூப் 1, 1-ஏ முதன்மை தேர்வுகள் தொடக்கம்
குரூப் 1 மற்றும் 1-ஏ முதன்மைத் தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
அனல் மின்நிலையங்களுக்கு மாதம் இரு சனிக்கிழமைகள் விடுமுறை
அனல் மின்நிலைய ஊழியர்களுக்கு இனி மாதந்தோறும் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

