உக்ரைன் போா் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்கள் நாட்டுக்கும், மேற்கு ஆசிய நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதற்காகவும், சா்வதேச கச்சா எண்ணெய் சந்தை தொடா்பான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் இந்தச் சுற்றுப் பயணத்தை புதின் மேற்கொள்கிறாா்.
இந்த சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத் தலைநகா் அபுதாபியிலுள்ள கசா் அல்-வதன் விமான நிலையத்தில் புதன்கிழமை வந்திறங்கிய புதினை அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஷேக் அப்துல்லா பின் ஸாயத் அல் நஹ்யான் வரவேற்றாா்.
பின்னா் அங்கிருந்து அதிபா் மாளிகைக்குச் சென்ற புதின், அங்கு அதிபா் ஷேக் முகமது பின் ஸாயத் அல் நஹ்யானைச் சந்தித்துப் பேசினாா்.
இரு தரப்பு வா்த்தக நல்லுறவை மேம்படுவதற்கான ஆலோசனைகளை இருவரும் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

